
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்பின் 10ஆவது தொடர் இன்று நடக்கும் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்றுடன் முடிகிறது. கடந்ஹ 30 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடரானது 24 ஆம் தேதி இன்றுடன் முடிகிறது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் உள்பட 206 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 சுற்றுகளாக நடந்தது. இதில், ஆர் பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றனர்.
செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தாவின் சொத்து மதிப்பு ரூ.83 லட்சமா?
இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது சுற்றுப் போட்டியும் டிராவில் முடிந்தது. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்றுப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த் தனது 17ஆவது வயதில், உலக செஸ் பட்டத்தை வென்ற முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
யார் இந்த பிரக்ஞானந்தா, படைத்த சாதனைகள் என்னென்ன?
கடந்த 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த், 1987 ஆம் ஆண்டு FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்றார். விஸ்வநாதன் ஆனந்த் 6 வயது முதலே செஸ் விளையாடி வருகிறார். அவருக்கு அவரது தாயார் தான் செஸ் விளையாட கற்றுக் கொடுத்துளார். 14 வயதிற்குள், ஆனந்த் இந்திய தேசிய சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப்பை ஒன்பது ஆட்டங்களில் ஒன்பது வெற்றிகளின் சரியான மதிப்பெண்ணுடன் வென்றார். 15 வயதில் அவர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்ற இளைய இந்தியர் ஆனார். அடுத்த ஆண்டு, அவர் தொடர்ந்து மூன்று தேசிய சாம்பியன்ஷிப்களில் முதலாவதாக வென்றார்.
இன்று நடக்கும் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் ஆர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலக செஸ் சாம்பியன் டைட்டில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.