ஸ்லெட்ஜிங் செய்த பாண்டேவிற்கு சிக்ஸரில் பதிலடி கொடுத்த புஜாரா!! வீடியோ

By karthikeyan VFirst Published Jan 27, 2019, 3:51 PM IST
Highlights

39 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணி, 239 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 23 ரன்களுக்கே விழுந்துவிட்டன. அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா - ஜாக்சன் ஆகிய இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.
 

ரஞ்சி தொடரின் அரையிறுதியில் புஜாரா - ஜாக்சனின் பார்ட்னர்ஷிப்பால் கர்நாடக அணிக்கு எதிராக வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறது சவுராஷ்டிரா அணி. 

ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதிய ஒரு அரையிறுதி போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற விதர்பா அணி, இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடந்துவரும் மற்றொரு அரையிறுதி போட்டியில் கர்நாடகா மற்றும் விதர்பா அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணி, முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சவுராஷ்டிரா அணி 236 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

39 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணி, 239 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 23 ரன்களுக்கே விழுந்துவிட்டன. அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா - ஜாக்சன் ஆகிய இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.

3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்ட கர்நாடக பவுலர்களால், நான்காவது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. புஜாரா - ஜாக்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிவருகின்றனர். இருவருமே அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். இடையில் வினய் குமார் வீசிய ஒரு பந்து புஜாராவின் பேட்டை உரசி சென்றது. அதை கர்நாடக விக்கெட் கீப்பர் கேட்ச் செய்தார். அது அவுட்டுதான். ஆனால் அம்பயர் அவுட்டில்லை என்று கூறியதால் வினய் குமார் உள்ளிட்ட கர்நாடக வீரர்கள் அனைவருமே அதிருப்தியடைந்தனர். அதுதொடர்பாக வினய் குமார் அம்பயரிடம் வாக்குவாதமே செய்தார். எனினும் எந்த பலனுமில்லை. 

இதையடுத்து தொடர்ந்து ஆடிய புஜாரா, அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னிங்ஸை வளர்த்தெடுத்தார். ஜாக்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி சவுராஷ்டிரா அணியை அழைத்து செல்கின்றனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் புஜாராவை கர்நாடக அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே ஸ்லெட்ஜிங் செய்தார். தங்கள் அணியின் பவுலர் ஷ்ரேயாஸ் ஐயரை உத்வேகப்பத்தும் விதமாக, ஒரே ஒரு சோம்பலான ஷாட்டு தான், அவன்(புஜாரா) அவுட்டாகிடுவான் என்று புஜாராவை சீண்டினார். ஆனால் அந்த ஸ்லெட்ஜிங்கிற்கு சிக்ஸர் மூலம் பதிலடி கொடுத்து, ஸ்லெட்ஜிங் செய்த வாயை அடக்கினார் புஜாரா. 

pic.twitter.com/kMPkANCCYG

— Mushfiqur Fan (@NaaginDance)
click me!