நீ எப்போதுமே செம கெத்துதான் தல!! ஸ்டம்புக்கு பின்னால் நின்னு மாஸ் காட்டும் தோனி.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 27, 2019, 2:14 PM IST
Highlights

குல்தீப் மற்றும் சாஹலுக்கு அப்பாற்பட்டு பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவிற்கும் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என தோனி தொடர்ந்து வழிகாட்டிவருகிறார். கேதர் ஜாதவும் அவ்வப்போது முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனைகளை அமைத்து கொடுக்கிறார். 

தோனி கேப்டன்சியிலிருந்து விலகினாலும் அவரது ஆலோசனைகள் நல்ல பலனை கொடுப்பதோடு, ஆட்டத்தில் திருப்புமுனைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. 

ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தவும் உதவும். ஒரு விக்கெட் கீப்பராக ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு எதிரணி வீரர்களின் பேட்டிங் உத்திகளை அறிந்து, அவர்களின் பிளஸ், மைனஸ்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் தோனி, ஃபீல்டிங் செட்டப்பில் கேப்டனுக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர் வழங்கும் ஆலோசனைகள் அபாரமானவை. 


 
தோனியின் இந்த ஆலோசனைகளின் மூலம் அதிகம் பயனடைந்தவர்கள் என்றால் அது குல்தீப்பும் சாஹலும்தான். ஸ்பின் பவுலர்களான அவர்களுக்கு அவ்வப்போது ஐடியா கொடுத்துக்கொண்டே இருப்பார் தோனி. எந்த திட்டமும் இல்லாமல் அவர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களின் ஒரே நம்பிக்கை தோனி தான். 

குல்தீப் மற்றும் சாஹலுக்கு அப்பாற்பட்டு பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவிற்கும் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என தோனி தொடர்ந்து வழிகாட்டிவருகிறார். கேதர் ஜாதவும் அவ்வப்போது முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனைகளை அமைத்து கொடுக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் நிகோல்ஸ் விக்கெட்டையும் இரண்டாவது போட்டியில் ரோஸ் டெய்லரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ரோஸ் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்திய கிரெடிட்டுகள் பெரும்பாலும் தோனிக்குத்தான். ஏனென்றால், டெய்லரை தோனி செய்த ஸ்டம்பிங் மிகவும் அபாரமானது. 

கேதர் ஜாதவிற்கு ஒரு விக்கெட்டை எடுத்து கொடுத்ததோடு இல்லாமல், நிகோல்ஸுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற அறிவுரையையும் ஹிந்தியில் வழங்கினார். அவர் அந்த பக்கம் தான் அடிப்பார், ஆனால் அந்த பக்கம் ஆடுவது கடினம், அதனால் அங்கு ஃபீல்டர்களை நிறுத்தலாம் என்று கூறுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. 

pic.twitter.com/mU7fJ5ANvj

— Mushfiqur Fan (@NaaginDance)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டிரெண்ட் போல்ட்டுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தோனி கூற, அதேமாதிரி பந்துவீசி குல்தீப் யாதவ் போல்ட்டின் விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!