
பெண் தடகள வீராங்கனையான பி.டி.உஷாவுக்கு ஐஐடி கான்பூர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்துள்ளது. இது இவர் பெறும் இரண்டாவது டாக்டர் பட்டமாகும்.
பெண் தடகள வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் பி.டி.உஷானு.
கேரளாவைச் சேர்ந்த பி.டி.உஷா சர்வதேச அளவில் தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.
பல துறைகளில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி முன்மாதிரியாகத் திகழ்ந்து, அந்தத் துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவர்களுக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம்.
அதன்படி, ஐஐடி கான்பூர் தடகள விளையாட்டுகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்துள்ளது.
வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஐஐடி கான்பூரின் 50-வது பட்டமளிப்பு விழா நடக்கயிருக்கிறது. இதில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு 16-ஆம் தேதி பிடி உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கயிருப்பதாக கூறப்படுகிறது.
இது இவருக்கு கிடைக்கும் இரண்டாவது டாக்டர் பட்டமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2002-ஆம் ஆண்டு கன்னூர் பல்கலைக்கழகம் பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.