
இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தாமதமாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பந்துவீச்சுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தை விட பாகிஸ்தான் அணி தாமதமாக பந்து வீசியது என போட்டி நடுவர்கள் புகார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் இந்தத் தவறை ஒப்புக் கொண்டதை அடுத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, பாகிஸ்தான் அணியின் வீரர்களுக்கான போட்டி ஊதியத்தில் 10 சதவீதமும், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் ஊதியத்தில் 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்து.
ஐசிசி போட்டி நடுவர் குழுவின் கிறிஸ் பிராட் இந்த அபராதத்தை விதித்தார்.
சாம்பியன்ஸ் டிராபியின் அடுத்த ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இதே தவறை செய்யும் பட்சத்தில், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.