
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி அஸர்பைஜானின் கேபலா நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 430 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து ஜோடி ரஷியா ஜோடியை 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.
இதனால் இந்தியாவுக்கு தங்கமும், ரஷியாவுக்கு வெள்ளியும் கிடைத்தன. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வென்றது.
சீனா 3 தங்கம் உள்பட 6 பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
கலப்பு இரட்டையர் 10 மீ. ஏர் பிஸ்டல் அணி பிரிவில் இந்தியாவின் ஜிது ராய்-ஹீனா சித்து ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.