
ரிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் - ஸ்காட் லிப்ஸ்கி இணை காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
ரிகோ ஓபன் டென்னிஸ் போட்டி நெதர்லாந்தின் ஸ்ஹெர்டோகன்போஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி இணை தங்களின் முதல் சுற்றில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் - லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லர் இணையுடன் மோதினர்.
இதில், 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டார்சிஸ் - முல்லர் இணையைத் தோற்கடித்து பயஸ் – லிப்ஸ்கி இணை வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பயஸ் – லிப்ஸ்கி இணை காலிறுதிக்கு முன்னேறியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.