தென்னிந்திய கால்பந்து போட்டியில் கும்பகோணம் சாய் அணி சாம்பியன்…

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
தென்னிந்திய கால்பந்து போட்டியில் கும்பகோணம் சாய் அணி சாம்பியன்…

சுருக்கம்

Kumbakonam Chai team champions in South Indian football match

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில் கும்பகோணம் சாய் அணி சாம்பியன் வென்று அசத்தியது.

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 22 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.

இதன் இறுதிப் போட்டியில் கும்பகோணம் சாய் கால்பந்து அணியும், திருச்சி கேஆர்ஜி கால்பந்து அணியும் மோதின.

இதில், 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி கேஆர்ஜி கால்பந்து அணியை வீழ்த்தி வாகைச் சூடியது கும்பகோணம் சாய் கால்பந்து அணி.

இதனையடுத்து மூன்றாம் இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் சேலம் வர்ஷா கால்பந்து அணியும், தஞ்சாவூர் பூமி கால்பந்து அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் பூமி கால்பந்து அணியை தோற்கடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு அரசு பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் தி.செந்தில்குமார், திருவாரூர் தடகள சங்கத் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!