
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் லாத்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபெங்கோ சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது.
இதன் இறுதிச் சுற்றில் தரவரிசையில் 47-ஆவது இடத்தில் இருக்கும் ஜெலீனா, உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்புடன் மோதினார்.
இதில், 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஹேலப்புக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார் ஜெலீனா.
இந்த வெற்றியின்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் லாத்வியர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெலீனா.
1997-க்குப் பிறகு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஜெலீனா.
இதுதவிர தரவரிசையில் முன்னணியில் இல்லாமல் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையும் ஜெலீனா வசமாகியுள்ளது.
பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெலீனா, தரவரிசையில் 47-ஆவது இடத்தில் இருந்து 12-ஆவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.