இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..? மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

First Published Jul 17, 2018, 12:43 PM IST
Highlights
probable india 11 for third odi against england


தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும், இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இதையடுத்து நடந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

அதனால் தொடர் சமநிலையில் உள்ளது. இன்று நடக்க இருக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும்.

இந்திய அணியில் டாப் ஆர்டர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சார்ந்து உள்ளது. அந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்ந்து வருகிறது. ஒருநாள் போட்டிக்கு ரெய்னாவை விட தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் என்ற குரல் வலுத்துள்ளது. 

மிடில் ஆர்டர் பிரச்னையை போலவே வேகப்பந்து வீச்சும் பிரச்னையாக உள்ளது. புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் இல்லாததன் விளைவு அப்பட்டமாக தெரிகிறது. அதனால் சுழல்பந்து வீச்சை சார்ந்தே உள்ளது இந்திய அணி. மிடில் ஆர்டர் மற்றும் வேகப்பந்து ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் முடிவுகட்டும் விதமாக இன்றைய அணி தேர்வு இருக்கலாம். 

இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சித்தார்த் கவுல், ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய சித்தார்த் கவுல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார். எனினும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடிய கவுல், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே அவர் நீக்கப்பட்டு, காயம் காரணமாக விலகியிருந்த புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல்
 

click me!