புரோ கபடி: அபாரமான ஆட்டத்தால் யு.பி.யோதாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்…

Asianet News Tamil  
Published : Sep 14, 2017, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
புரோ கபடி: அபாரமான ஆட்டத்தால் யு.பி.யோதாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்…

சுருக்கம்

Pro Kabaddi Tamil Leader defeated Ubayoda by brilliant game

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 75-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை வீழ்த்தியது. 

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 75-வது ஆட்டம் அரியாணா மாநிலம் சோன்பட்டில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் யு.பி.யோதா ரைடர் நிதின் தோமர் தனது முதல் ரைடிலேயே இரு புள்ளிகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து அபாரமாக ஆடி மேலும் இரு புள்ளிகளைக் கைப்பற்ற முதல் மூன்று நிமிடங்களின் முடிவில் 6-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது யு.பி.யோதா. 

அதனைத் தொடர்ந்து தடுமாறிய தமிழ் தலைவாஸ் அணி 4-வது நிமிடத்தில் ஆல் அவுட்டாக, யு.பி.யோதா 9-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதன்பிறகு தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர், பிரபஞ்சன் ஆகியோர் தலா ஒரு புள்ளியைப் பெற்றுத் தர, அந்த அணி சரிவிலிருந்து மீண்டது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் நிமிடத்திலேயே யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கியது. சரிவிலிருந்து மீண்ட தமிழ் தலைவாஸ் அணி 16-20 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.

33-வது நிமிடத்தில் யு.பி.யோதா அணி 26-21 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு இரு புள்ளிகளைப் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, 37-வது நிமிடத்தில் 25-26 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. 

தமிழ் தலைவாஸ் அணி, 38-வது நிமிடத்தில் யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கிதன்மூலம்ன் தமிழ் தலைவாஸ் அணி 29-28 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அதே 38-வது நிமிடத்தில் நிதின் தோமர் சூப்பர் ரைடின் மூன்று புள்ளிகளைக் கைப்பற்ற, யு.பி.யோதா அணி 31-29 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் சூப்பர் ரைடின் மூலம் மூன்று புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 33-31 என்ற முன்னிலையை எட்டியது.

இதன்பிறகு யு.பி.யோதா இரு புள்ளிகளைப் பெற, கடைசி விநாடியில் அஜய் தாக்குர் ஒரு புள்ளியைக் கைப்பற்றினார். இதனால் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள யு.பி.யோதா அணி 6-வது தோல்வியைச் சந்தித்துள்ளது. எனினும் அந்த அணி 37 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Riyan Parag | டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!
Riyan Parag: டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!