
உலகக் கோப்பையை கையில் ஏந்தி வலம் வர 22 ஆண்டுகள் காத்திருந்தோம் என்று 2006 முன்னாள் இந்திய கேப்டனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
முன்னாள் இந்திய கேப்டனான சச்சின் டெண்டுல்கர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “2006 முதல் 2007 உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டம். 2007-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 'சூப்பர்-8' சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறவில்லை.
எனினும் பின்னர் அதிலிருந்து மீண்ட இந்திய அணி புதிய சிந்தனைகளோடு, புதிய வழியில் பயணிக்க ஆரம்பித்தது. ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டன. ஓர் அணியாக இணைந்து சாதிக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம். அதற்கேற்ப அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடினோம். அதன் காரணமாக வெற்றி எங்கள் வசமானது.
இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ்ந்தபோது, அது சரியா? தவறா? என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதற்கான பலன் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. வெற்றிக்காக நாங்கள் காத்திருந்தோம்.
அற்புதமான உலகக் கோப்பையை நான் கையில் ஏந்தி வலம் வருவதற்கு 22 ஆண்டுகள் ஆனது” என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.