உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் பரிசுகள் அறிவிப்பு…

 
Published : Sep 14, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் பரிசுகள் அறிவிப்பு…

சுருக்கம்

Prize for who won gold in World Athletics Competition

உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் பரிசுகளை அறிவித்துள்ளார்.

உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டி கனடாவில் நடைபெற்றது.

இதில், இந்தியாவின் சார்பில் 36 வீரர்கள் பங்கேற்றன்னர். அதில், தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மூன்று பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“உயரம் குன்றியோருக்கான 7-வது உலக தடகள விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் 36 பேர் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த கே.கணேசன், சி.மனோஜ், ஏ.செல்வராஜ் ஆகியோர் ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அவர்களின் சாதனைகளைப் பாராட்டி ஊக்கப் பரிசுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற கே.கணேசனுக்கு ரூ.15 இலட்சம், ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற சி.மனோஜுக்கு ரூ.11 இலட்சம், 1 தங்கப் பதக்கம் வென்ற ஏ.செல்வராஜுக்கு ரூ.5 இலட்சம் என ரூ.31 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும், வீரர்களின் பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோருக்கும் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்” என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?