புரோ கபடி: இப்போதான் 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ் தலைவாஸ்…

 
Published : Sep 25, 2017, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
புரோ கபடி: இப்போதான் 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ் தலைவாஸ்…

சுருக்கம்

Pro Kabaddi Now this is the 3rd victory of Tamil Leadership ...

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இப்போதுதான் மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்கால் வீரர் குன் லீ இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடக்கத்தில் பெங்கால் அணியின் பின்கள வீரர்கள் தடுமாற, தமிழ் தலைவாஸ் கையில் ஆட்டம் இருந்தது.

எனினும் 9-வது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்ற பெங்கால் அணி ஸ்கோரை 7-7 என்ற கணக்கில் சமன் செய்தது. 11-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குரின் சிறப்பான ரைடால் அந்த அணி 10-8 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

பின்னர் 11-வது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸை ஆல் ஔட்டாக்கிய தமிழ் தலைவாஸ் அணி 13-9 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.  

பின்னர் ஒரு கட்டத்தில் பெங்கால் வீரர் தீபக் நர்வாலின் சூப்பர் ரைடால் அந்த அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. பிறகு சூப்பர் டேக்கிள் மூலம் பெங்கால் அணியை திணறடித்த தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 18-15 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி, 29-வது நிமிடத்தின் முடிவில் 24-20 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் அபாரமாக ஆடிய பெங்கால் ரைடர் மணீந்தர் சிங் 31-வது நிமிடத்தில் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளை கைப்பற்றினார். இதனால் பெங்கால் அணி 26-24 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

அதற்குப் பதிலடியாக தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் மூன்று நிமிடங்களில் மூன்று புள்ளிகளைக் கைப்பற்றியதால் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் முன்னிலை பெற்றது.

இறுதி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியது. ஆட்டத்தின் கடைசி ரைடில் அஜய் தாக்குர் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றதன் காரணமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பெங்கால் வாரியர்ஸ் இழந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!