புரோ கபடி: தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி பரபரப்பான போட்டி டை! பெங்களூருவை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்

Published : Nov 30, 2022, 10:08 PM IST
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி பரபரப்பான போட்டி டை! பெங்களூருவை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி இடையேயான பரபரப்பான போட்டி டை ஆனது.  

புரோ கபடி லீக்கின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஹைதராபாத்தில் இன்று 2 போட்டிகள் நடந்தன. பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையேயான போட்டியில் ஜெய்ப்பூர் அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடியது.

இந்த தொடரில் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக அந்த அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி 45 - 25 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.

அம்பாதி ராயுடு மாதிரி சஞ்சு சாம்சனை ஒழிக்க பார்க்குறாங்க! பிசிசிஐ-யின் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தும் கனேரியா

அடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸும் டபாங் டெல்லியும் மோதின. இந்த போட்டி தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணிகளுமே மாறி மாறி புள்ளிகளை பெற்றன. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், கடைசி வரை ஆட்டம் பரபரப்பாக இருந்தது. கடைசியில் 37-37 என ஆட்டம் டை ஆனது.

Vijay Hazare: கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய அசாம் அணி போராடி தோல்வி! ஃபைனலில் மகாராஷ்டிரா - சௌராஷ்டிரா மோதல்

புள்ளி பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ் அணிகள் அடுத்த 3 இடங்களிலும், தமிழ் தலைவாஸ் அணி 5ம் இடத்திலும் உள்ளன.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sanju Samson: மின்னல் வேக ஸ்டம்பிங்.. களத்தில் வெடித்த வாக்குவாதம்..! பிளே-ஆஃப்க்குள் நுழைந்த SRH
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?