Pro Kabaddi League: வெறித்தனமா விளையாடிய ஜெய்ப்பூர் - குஜராத் அணிகள்..! பரபரப்பான போட்டி கடைசியில் டிரா

Published : Dec 09, 2022, 09:22 PM IST
Pro Kabaddi League: வெறித்தனமா விளையாடிய ஜெய்ப்பூர் - குஜராத் அணிகள்..! பரபரப்பான போட்டி கடைசியில் டிரா

சுருக்கம்

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி 51-51 என டிரா ஆனது.  

புரோ கபடி லீக்கின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ் அணிகள் முதல் 4 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறின.

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் வெகுண்டெழுந்து அபாரமாக விளையாடி  தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது. அதேபோலவே இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று, பின்னர் தோல்விகளை தழுவிய டபாங் டெல்லி அணி, கடைசியில் சில வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

இந்திய அணியின் தலைமை தேர்வாளராகும் தரமான முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்..?

ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இன்றைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடக்கம் முதலே சிறப்பாக இருந்தது. இரு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தன. இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் வெறித்தனமாக விளையாடின.

BAN vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை

இரு அணிகளும் ஆட்டத்தின் எந்த சூழலிலும் பின் தங்கவில்லை. மாறி மாறி புள்ளிகளை குவிக்க, பரபரப்பாக இருந்த இந்த ஆட்டம் கடைசியில் 51-51 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs JPN T20I: ஜப்பானுடன் டி20 மோதல், சஞ்சுவுடன் வைபவ் ஓப்பனிங், அபிஷேக்குக்கு ரெஸ்ட்!
MS Dhoni: “பிளேயரா? மென்டரா?” தோனியின் அடுத்த ரோல் என்ன..? CSK வெளியிட்ட முக்கிய அப்டேட்..!