Pro Kabaddi League: ஃபைனலில் புனேரி பல்தானை வீழ்த்தி 2வது முறை கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

Published : Dec 17, 2022, 09:53 PM IST
Pro Kabaddi League: ஃபைனலில் புனேரி பல்தானை வீழ்த்தி 2வது முறை கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

சுருக்கம்

புரோ கபடி லீக் ஃபைனலில் புனேரி பல்தானை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பெங்களூரு, புனே, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

மற்ற 2 அரையிறுதி போட்டியாளர்களை தீர்மானிக்கும் முதல் பிளே ஆஃபில் டபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணியும், அடுத்த பிளே ஆஃப் போட்டியில் யு.பி யோதாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.  தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்

முதல் அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2வது அரையிறுதியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்தான் அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.

புரோ கபடி லீக் தொடரின் முதல் சீசனில் கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 2வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், புனேரி பல்தான் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் களமிறங்கின. 

மும்பையில் இன்று நடந்த ஃபைனலில் ஜெய்ப்பூர் - புனே அணிகளுக்கு இடையேயான போட்டி தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. தொடக்கத்திலிருந்தே 2-3 புள்ளிகள் முன்னிலையில் இருந்துவந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி கடைசியில் 33-29 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பையை வென்றது. புனேரி பல்தானின் கோப்பை கனவை தகர்த்து 2வது முறையாக வென்று ஜெய்ப்பூர் அணி சாதனை படைத்தது. 

பாட்னா பைரேட்ஸுக்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை கோப்பையை வென்ற 2வது அணி என்ற சாதனையை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி படைத்தது. பாட்னா பைரேட்ஸ் அணி அதிகபட்சமாக 3 முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, டபாங் டெல்லி அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!
Praggnanandhaa meets CM Vijay : CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! - வீடியோ உள்ளே