பாகிஸ்தானுக்கு வாழ்த்துச் சொன்ன தலைவர் - சுளீர் என சுட்ட கவுதம் கம்பீர்

Asianet News Tamil  
Published : Jun 19, 2017, 02:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பாகிஸ்தானுக்கு வாழ்த்துச் சொன்ன தலைவர் - சுளீர் என சுட்ட கவுதம் கம்பீர்

சுருக்கம்

President to congratulate Pakistan

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி முடிவடைந்தாலும், அது ஏற்படுத்திச் சென்ற வில்லங்கம் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை தீயாய் சுட்டு வருகிறது.

இந்தியா தோல்வி அடைந்த மறுகனமே சகிப்புத் தன்மை இல்லாமல் கேப்டன் விராட்கோலியின் புகைப்படங்களை ரசிகர்கள் தீ வைத்துக் கொளுத்தி வெறுப்பு உமிழ்ந்தனர். போதாத குறைக்கு முகநூலிலும் முகம் சுழிக்கும் வகையில் இந்திய அணியின் மீது அத்தனை விமர்சனங்கள்.

ரசிகர்களின் இந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் இதுவரை எந்த வீரரும் எதிர்வினையாற்றாத நிலையில், முதல் ஆளாக கொந்தளித்திருக்கிறார் கவுதம் கம்பீர். 

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மிர்விஸ் உமர் ஃபரூக் போட்ட ஒரு டுவிட்டே கவுதம் கம்பீரின் கொந்தளிப்புக்கு காரணம்.

சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் மிர்விஸ் ஃபரூக், தனது டுவிட்டர் பக்கத்தில் “எங்கும் பட்டாசுத் சத்தம் தான் கேட்கிறது. ரம்ஜான் பண்டிகையைப் போல் உள்ளது. அந்த நாளில் சிறப்பா செயல்படும் அணி வெற்றி பெறும்.பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

ஃபரூக்கின் டுவிட்டர் பதிவைப் பார்த்து கொந்தளித்த கம்பீர் இதற்கு பதிலளி அளித்திருக்கிறார். “மிர்விஸ் உமர் ஃபரூக்குக்கு ஒரு பரிந்துரை, நீங்கள் ஏன் எல்லை தாண்டிச் செல்லக் கூடாது. சீனாவில் சிறப்பான பட்டாசு வகைகள் கிடைக்கும்.பெட்டி படுக்கையை பேக் செய்ய நான் உதவலாமா?  என்று குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு விணையாகிவிட்டதா….!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!