
பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) சீசன் - 3 போட்டியில், பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஐதராபாத் ஹன்டர்ஸ்.
பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) சீசன் - 3 போட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஐதராபாத் ஹன்டர்ஸ் 4-3 என்ற கணக்கில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில், ஐதராபாதின் எம்.கிடோ - ஒய்.ஒய்.சியாங் கூட்டணி, 9-15, 10-15 என்ற செட் கணக்கில் பெங்களூரின் எம்.போ - கே.எஸ்.ரங் கூட்டணியிடம் வீழ்ந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் லீ ஹியூன் இல், 15-7, 15-13 என்ற செட் கணக்கில் எதிரணியின் எஸ்.டேயை வீழ்த்தினார். மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பெங்களூரின் அதிரடி ஆட்டக்காரர் அக்ஸல்சென் 15-8, 15-10 என்ற செட் கணக்கில் பி.எஸ்.பிரணீத்தை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், ஐதராபாத் அணியின் நட்சத்திர வீராங்கனை கரோலினா மரீன் 15-8, 15-14 என்ற நேர் செட் கணக்கில் பெங்களூரின் கில்மாரை வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், பெங்களூரின் கே.எஸ்.ரங் - சிக்கி ரெட்டி இணை 11-15, 12-15 என்ற நேர் செட் கணக்கில் ஐதராபாத் ரங்கிரெட்டி - பெர்னாடத் இணையிடம் வீழ்ந்தது.
இவ்வாறாக 4-3 என்ற கணக்கில் பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்று சாம்பியன் வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.