
Preity Zinta Apologizes to Fans: தர்மசாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இந்த வார தொடக்கத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் டெல்லி, பஞ்சாப் அணிகள் விளையாடிய போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அந்த நேரத்தில் 'முகம் சுளித்து', "புகைப்படங்களுக்கு மறுப்பு" தெரிவித்ததற்காக மன்னிப்பும் கேட்டார். பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் தனது ட்வீட்டில், "சில நாட்களுக்குப் பிறகு இறுதியாக வீடு திரும்பினேன். ஐபிஎல் அணிகள், அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் தர்மசாலாவிலிருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும், வசதியாகவும் வெளியேற உதவியதற்காக இந்திய ரயில்வே மற்றும் நமது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனமார்ந்த நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
''தர்மசாலாவில் உள்ள மைதானத்தை பாதுகாப்பாகவும் ஒழுங்கான முறையிலும் வெளியேற்றுவதற்கு ஒருங்கிணைப்பு செய்த ஜெய்ஷா, அருண் தூமல், பிசிசிஐ, எங்கள் சிஇஓ சதீஷ் மேனன் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் செயல்பாட்டுக் குழுவினருக்கு மிக்க நன்றி. எல்லாம் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டது."
மேலும், இறுதியாக, தர்மசாலா மைதானத்தில் இருந்த அனைவருக்கும்--நன்றி, நன்றி, நன்றி'' என்று ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.
மேலும் ட்வீட்டில் பதிவிட்ட ப்ரீத்தி ஜிந்தா, ''பீதியடையாமல், கூட்ட நெரிசலைத் தவிர்த்ததற்கு. நீங்கள் அனைவரும் அசத்தலானவர்கள். நான் கொஞ்சம் முகம் சுளித்து, அனைவருடனும் புகைப்படம் எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு மன்னிக்கவும், ஆனால் அந்த நேரத்தில் முன்னுரிமை அனைவரின் பாதுகாப்புதான், மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது எனது கடமையும் பொறுப்புமாகும். அதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.