IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் ரத்து! அதிரடி அறிவிப்பு! மற்ற போட்டிகள் எப்போது நடக்கும்?

Published : May 09, 2025, 12:28 PM ISTUpdated : May 09, 2025, 12:43 PM IST
IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் ரத்து! அதிரடி அறிவிப்பு! மற்ற போட்டிகள் எப்போது நடக்கும்?

சுருக்கம்

இந்தியா -பாகிஸ்தான் போர் காரணமாக ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

IPL 2025 suspended: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் 2025 உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து 

முன்னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?