குண்டு மழையால் அலறிய வெளிநாட்டு வீரர்கள்! கிரிக்கெட் போட்டிகள் UAE-க்கு மாற்றம்!

Rayar A   | ANI
Published : May 09, 2025, 09:29 AM ISTUpdated : May 09, 2025, 09:33 AM IST
குண்டு மழையால் அலறிய வெளிநாட்டு வீரர்கள்! கிரிக்கெட் போட்டிகள் UAE-க்கு மாற்றம்!

சுருக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

PSL Cricket League moved to UAE: பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஎஸ்எல்) மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பொதுமக்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா அந்த நாட்டுக்கு மறக்க முடியாத அடியை கொடுத்து வருகிறது. 

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்

இந்தியாவின் மும்முனை தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் பிஎஸ்எல் என்ற டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவின் தொடர் தாக்குதல்களால் இந்த பிஎஸ்எல் போட்டி இப்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஎஸ்எல் போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு அருகில் இந்தியாவின் தாக்குதல் அதிகரித்ததால் வெளிநாட்டு வீரர்கள் அலறினார்கள். 

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் 

இதனால் ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிஎஸ்எல்லின் கடைசி எட்டு போட்டிகள் இப்போது யுஏஇயில் நடத்தப்படும். பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் மைதானங்களில் போட்டிகளைக் காண முடியாது என்பதற்கு பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி வருத்தம் தெரிவித்தார். "எங்கள் உள்நாட்டு பார்வையாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டிகளை பாகிஸ்தானின் மைதானங்களில் காண முடியாது என்பது எனக்கு வருத்தமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

பிஎஸ்எல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் 

"அரசியலும் விளையாட்டும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிசிபி எப்போதும் நிற்கிறது. இருப்பினும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட செயலின் காரணமாக, பிசிபி மீதமுள்ள போட்டிகளை யுஏஇக்கு மாற்ற முடிவு செய்துள்ளது, இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை காப்பாற்ற முடியும்'' என்று மொஹ்சின் நக்வி தெரிவித்தார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 

"பலமுறை இன்னல்களைச் சமாளித்து கிரிக்கெட் விளையாட்டு செழித்து வளர உறுதி செய்த ஒரு பொறுப்பான அமைப்பாக, எச்பிஎல் பிஎஸ்எல்லில் பங்கேற்கும் அனைத்து வீரர்களின் மன நலனையும் உறுதி செய்வது எங்களுக்கு முக்கியமானது. கடந்த காலங்களைப் போலவே, போட்டியின் சிறந்த நலன்களை மேம்படுத்துவதற்கும், எங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எங்கள் பங்குதாரர்கள் எங்களுடன் ஒன்றுபடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

 பிஎஸ்எல்லின் பின்வரும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: 

* கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் சல்மி
* பெஷாவர் சல்மி vs லாகூர் கலந்தர்ஸ்
* இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ்
* முல்தான் சுல்தான்ஸ் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ்
* தகுதிச்சுற்று
* எலிமினேட்டர் 1
* எலிமினேட்டர் 2
* இறுதிப்போட்டி
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி