
தனக்கும் சேவாக்குக்கும் இடையே நடந்த சாதாரண வாதம் பூதாகரமாக்கப்பட்டதாகவும் அது ஒரு போலி செய்தி எனவும் பிரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார்.
இதுவரை ஒரு ஐபிஎல் தொடரை கூட வெல்லாத மூன்று அணிகளில் பஞ்சாப்பும் ஒன்று. அதனால் இந்த முறை ஐபிஎல் தொடரை வெல்லும் முனைப்பில் பஞ்சாப் அணி ஆடிவருகிறது.
பஞ்சாப் அணிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, தொழிலதிபர் மோகித் பர்மன் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர். பஞ்சாப் அணியில் வீரராக ஆடிய சேவாக், இந்த முறை அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்தது தொடங்கி, அஸ்வினை கேப்டனாக நியமித்தது, ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் பதினொன்று வீரர்களை தேர்வு செய்வது என பஞ்சாப் அணியை சேவாக் தான் வழிநடத்திவருகிறார்.
இந்நிலையில், சேவாக்குக்கும் இடையே பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் அணியுடனான கடந்த போட்டியில் 159 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கெய்ல் விக்கெட் ஆரம்பத்திலேயே விழுந்தது. இதையடுத்து 3வது வரிசையில் கேப்டன் அஸ்வின் களமிறங்கி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். கருண் நாயர், மனோஜ் திவாரி என யாருமே சரியாக ஆடவில்லை. கடைசி வரை ஒற்றை வீரராக போராடிய ராகுல், 95 ரன்கள் அடித்தார். ஆனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து, அஸ்வினை முன்வரிசையில் களமிறக்கியது தொடர்பாக சேவாக்கிடம் பிரீத்தி ஜிந்தா கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்ற மற்ற சில விஷயங்களிலும் சேவாக்கிடம் பிரீத்தி கேள்வி கேட்க, அது சேவாக்கிற்கு பிடிக்கவில்லை. அதனால், போட்டி சார்ந்த விவகாரங்களில் பிரீத்தி ஜிந்தாவின் தலையீடு அதிகம் இருப்பதாகவும் அதை தடுக்குமாறும் மற்ற உரிமையாளர்களிடம் சேவாக் கூறியதாக தகவல்கள் வெளியாகியன.
சேவாக் - பிரீத்தி ஜிந்தா விவகாரம் மளமளவென பரவியது. இந்நிலையில், இதுதொடர்பாக பிரீத்தி ஜிந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், தனக்கும் சேவாக்குக்கும் இடையேயான சாதாரண வாதம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது. கடைசியில் நான் வில்லனாகிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.