35 வருஷத்துக்கு பின் உலக கோப்பையை தொட்டு சிலாகித்த கபில் தேவ்!!

Asianet News Tamil  
Published : May 11, 2018, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
35 வருஷத்துக்கு பின் உலக கோப்பையை தொட்டு சிலாகித்த கபில் தேவ்!!

சுருக்கம்

kapil dev touch world cup after thirty five years

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலிருந்து என்றுமே மறையாத பெயர் கபில் தேவ். 1983ம் ஆண்டு இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்றுக்கொடுத்தவர். 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 1983ம் ஆண்டு உலக கோப்பையிலும் இறுதி போட்டிக்கு வந்தது.

ஹாட்ரிக் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியுடன் மோதியது. வெஸ்ட் இண்டீஸின் ஹாட்ரிக் உலக கோப்பை கனவை தகர்த்தி, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பையை முதன்முறையாக வென்றது.

அதற்கடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2011 உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த இரண்டு கோப்பையும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்திற்கு சென்று தனது தலைமையிலான அணி வென்ற உலக கோப்பையை தொட்டு பார்த்து சிலாகித்துள்ளார் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">1983 Cup  , Me and my entire team very proud of this beauty which I saw after 1983 at BCCI office in mumbai. <a href="https://t.co/8Hf3kkAQbs">pic.twitter.com/8Hf3kkAQbs</a></p>&mdash; Kapil Dev (@therealkapildev) <a href="https://twitter.com/therealkapildev/status/994488278064816128?ref_src=twsrc%5Etfw">May 10, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

உலக கோப்பையை கையில் ஏந்திய போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டு, தனது நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் கபில் வெளிப்படுத்தியுள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?