கோலி இல்லாமலே இந்திய அணி ஜெயிக்கும்.. கங்குலி தடாலடி

Asianet News Tamil  
Published : May 11, 2018, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கோலி இல்லாமலே இந்திய அணி ஜெயிக்கும்.. கங்குலி தடாலடி

சுருக்கம்

india will win afghanistan test without kohli said ganguly

முழுநேர டெஸ்ட் அணி அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் ஆடுகிறது. இந்த போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. 

இங்கிலாந்தில் அடுத்த மாதம் கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக கோலி ஆட இருப்பதால், ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தாண்ட் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாகவும் பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, பகலிரவு டெஸ்ட் போட்டி, கிரிக்கெட்டின் அடுத்தகட்ட நகர்வு. அனைத்து அணிகளும் பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆடவேண்டும். தற்போதைய இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்தளவிற்கு தகுதியான வீரர்களை இந்திய அணி பெற்றுள்ளது என்றார். மேலும் திறமையான வீரர்களை இந்திய அணி பெற்றிருப்பதால், கோலி இல்லாவிட்டாலும் கூட ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் என உறுதியாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு இந்த ஆண்டின் இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக ஆட மறுப்பு தெரிவித்ததால், அந்த போட்டியை வழக்கம்போலவே பகலில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், பகலிரவு டெஸ்ட் ஆடினாலும் இந்தியா வெல்லும் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?