praggnanandhaa chess: விடியவிடிய செஸ் போட்டி: காலை பிளஸ்ஒன் தேர்வு: பைனலில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

By Pothy RajFirst Published May 25, 2022, 2:55 PM IST
Highlights

praggnanandhaa chess :அதிகாலை 2 மணிவரை செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதியில் பங்கேற்று வெற்றி பெற்று, இன்று காலை 11ம் வகுப்பு தேர்வு எழுத தமிழக வீரர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு சென்றுவிட்டார்.

அதிகாலை 2 மணிவரை செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதியில் பங்கேற்று வெற்றி பெற்று, இன்று காலை 11ம் வகுப்பு தேர்வு எழுத தமிழக வீரர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு சென்றுவிட்டார்.

விடியவிடிய செஸ்போட்டி, விடிந்தபின் படிப்பு, அதன்பின் 11ம் வகுப்பு வணிகவியல் தேர்வு என்று தமிழக பிரக்ஞானந்தா கலக்குகிறார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் 2022, ஆன்லைன் செஸ்போட்டி நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 10-ம் நிலை வீரரான நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை நேற்று எதிர்கொண்டார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு. 

இந்த ஆட்டத்தில் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். இந்த ஆட்டம் முடியும்போது அதிகாலை 2 மணி. 

இறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரனை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஏற்கெனவே உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனையும், காலிறுதியில் சீன வீரர் வைய் யி ஆகியோரையும் பிரக்ஞானந்த் வீழ்த்தினார்.

அரையிறுதியில் வெற்றி பெற்றது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில் “ இப்போது மணி இரவு 2 மணி. நான்தூங்க வேண்டும். அப்போதுதான் நாளை காலை நடக்கும் தேர்வில் தூங்காமல் என்னால் தப்பிக்க முடியும். நாளை காலை 8.45 மணிக்குள் பள்ளி்க்குள் இருக்க வேண்டும் எனக்கு வணிகவியல் தேர்வு நடக்கிறது.

இது என்னுடைய பொதுத்தேர்வு, அதில் சிறப்பாக எழுத வேண்டும். அதிலும் வணிகவியல் தேர்வு என்பதால் எளிதாக பாஸ் செய்துவிடுவேன் என்று நம்புகிறேன். தேர்விலும், போட்டியிலும் வெல்வேன் என நம்புகிறேன். தேர்வில் தேர்ச்சிஅடைவதைவிட போட்டியில் வெல்வது சிறப்பானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்

click me!