
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்ஜியோஸ், மிலோஸ் ரயோனிச், தாமஸ் பெர்டிச், நிஷிகோரி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது,
இந்தப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தின் 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் மற்றும் அமெரிக்காவின் ரியான் ஹாரிசன் மோதினர். இதில், 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ரியான் ஹாரிசனை, நிக் கிர்ஜியோஸ் தோற்கடித்தார்.
அதேபோன்று, உலகின் 2-ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ மோதிய ஆட்டத்தில் 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார்.
கனடாவின் மிலோஸ் ரயோனிச் தனது 2-ஆவது சுற்றில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லருடன் மோதி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், நெதர்லாந்தின் ராபின் ஹேஸியுடன் மோதி 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஜப்பானின் நிஷிகோரி 1-6, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டீனாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மானை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.