
கோவில்பட்டியில் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டியில் இன்று பல்வேறு அணிகள் மோதுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் ஆறாவது நாளான நேற்று மாலை 5 மணிக்கு ஒடிஸா கிழக்கு கடற்கரை ரயில்வே - புது டெல்லி ஓ.என்.ஜி.சி. அணிகள் இடையிலான முதல் ஆட்டம் நடைபெற்றது, இதில், 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரண்டாவது ஆட்டத்தில் தமிழ்நாடு லெவன் அணியும், புது டெல்லி சென்ட்ரல் செகரட்டரியேட் அணியும் மோதின. இதில், 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு லெவன் அணி வென்றது.
ஏழாவது நாளான இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புது தில்லி ஓ.என்.ஜி.சி. மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிகள் மோதுகின்றன.
இரண்டாவது ஆட்டத்தில் ஜலந்தர் இ.எம்.இ. கார்ப்ஸ் அணியும், புது தில்லி சென்ட்ரல் செகரட்டரியேட் அணியும் மோதுகின்றன.
மூன்றாவது ஆட்டத்தில், மும்பை இந்தியன் நேவி அணியும், போபாலைச் சேர்ந்த இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணியும் மோதுகின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.