புரோ கபடி லீக் 2024 – இன்றைய போட்டியில் குஜராத் அண்ட் பெங்கால் பலப்பரீட்சை; வெற்றி வாய்ப்பு யாருக்கு?

By Rsiva kumar  |  First Published Nov 13, 2024, 11:28 AM IST

PKL 2024 Today Matches :புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகளும், 2ஆவது போட்டியில் பாட்னா மற்றும் ஹரியானா அணிகளும் மோதுகின்றன.


PKL 2024 Today Matches : புரோ கபடி லீக் தொடரின் 11ஆவது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 18ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ், டாபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான் உள்பட மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இதுவரையில் 50 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் புனேரி பல்தான் அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று ஹரியானாஸ் டீலர்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திலும், யு மும்பா விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 4ஆவது இடத்திலும், டாபாங் டெல்லி விளையாடிய 10 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

கடைசி இடத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் 8ல் ஒரு வெற்றியுடன் 12ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வி ஒரு போட்டி டையில் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 51ஆவது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதே போன்று 52ஆவது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 9 மணிக்கு நொய்டாவில் நடைபெறுகிறது. இதுவரையில் நடைபெற்ற 10 சீசன்களில் முறையே பாட்னா பைரேட்ஸ் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 2 முறை டிராபி வென்றுள்ளது. யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், டாபாங் டெல்லி, புனேரி பல்தான் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் டிராபி வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் 2024 தொடரில் புனேரி பல்தான் அணி தான் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நிலையில், அந்த அணி இந்த முறை டிராபி கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதே போன்று தான் 3 முறை டிராபி வென்ற பாட்னா பைரேஸூம் டிராபி கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நேற்று நடைபெற்ற 49ஆவது போட்டியில் பெங்களூரு அணியை ஜெய்ப்பூர் வீழ்த்தியது. இதே போன்று 50ஆவது போட்டியில் புனேரி பல்தான் மற்றும் டாபாங் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 38 புள்ளிகள் பெறவே போட்டியானது டையில் முடிந்தது.

click me!