சவுதி அரேபியா வாழ்க்கை குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ன சொன்னார்? பியர்ஸ் மோர்கன் விளக்கம்!

By Rsiva kumarFirst Published Jan 28, 2023, 10:42 PM IST
Highlights

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சவுதி அரேபியா வாழ்க்கை குறித்து என்ன சொன்னார் என்பது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மோர்கன் வெளிப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் நடந்த நேர்காணலதைத் தொடர்ந்து இங்கிலாந்து பத்திரிக்கையாளரான பியர்ஸ் மோர்கன் சவுதி அரேபியா வாழ்க்கை குறித்து அவர் என்ன சொன்னார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சவுதி புரோ லீக் அணி அல் நாசர் கிளப்பில் விளையாட கிறிஸ்டியானோ ரொனால்டோ 175 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

எனது தோழியை மணந்தது மாயாஜாலமான நாள்: அக்‌ஷர் படேல் டுவீட்!

அல் நசாரின் புதிய வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலியான ஜார்ஜினா இருவரும் சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் வசித்து வருகின்றனர். சவுதி அரேபியாவில் யாரும் திருமணம் ஆகாமல் ஒரே அறையில் தங்க கூடாது. இது அந்த நாட்டு சட்ட விதிகளுக்கு எதிரானது. ரொனால்டோ அவரது காதலியான ஜார்ஜினா உடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை.

புதிய புதிய ஷாட்டுகளை அடிக்கிறாரே! சூர்யகுமார் யாதவ்விற்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு!

இதன் காரணமாக அவர் அரேபியா நாட்டிற்கு விளையாட வந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இது தொடர்பாக அல் நசார் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது: ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் அவருக்கு சவுதி அரேபியாவின் சட்டம் பொருந்தாது.

இந்தியா தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணமா? மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான நோ பால் மன்னன்!

ஒருவேளை குற்றச்செயல் நிகழ்ந்தால் அந்த நாட்டு சட்டப்படி தண்டனை கிடைக்கும். ஆதலால், ரோனால்டோவுக்கு எந்த சிக்கலும் இல்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணி மற்றும் அதன் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக அந்த அணியிலிருந்து ரொனால்டோ வெளியேறினார். அதன் பிறகு தான் சவுதி அரேபியாவின் அல் நசார் அணியுடன் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், ரொனால்டோவின் ரசிகர்கள், அவர் எப்படி அங்கு சென்று தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்வார் என்று ஆச்சரியப்பட்டனர்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்

உண்மையில், ரொனால்டோ அங்கு மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார் என்று இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மோர்கன் தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணி மற்றும் அதன் நிர்வாக அதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரொனால்டோவிற்கு இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடந்த சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் ரொனால்டோ அல் நசார் அணிக்காக களமிறங்கினார். அல் எட்டிஃபாக் அணியுடன் நடந்த மோதலில் அல் நசார் அணி 1-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நசார் அணியின் கேப்டனாகவும் களமிறங்கினார். ஆனால், கடைசி வரையில் அவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 

click me!