தடுமாறினாலும், சுதாரித்து ஆடியதால் தென் ஆப்பிரிக்காதான் லீடிங்க்…

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
தடுமாறினாலும், சுதாரித்து ஆடியதால் தென் ஆப்பிரிக்காதான் லீடிங்க்…

சுருக்கம்

Perplexed but South Africa Leading atiyat adjust

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் சற்றுத் தடுமாறினாலும், சுதாரித்துக் கொண்டு ஆடியதால் 95 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் குவித்து 81 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 268 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் 118 ஓட்டங்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜே.பி.டுமினி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

2-ஆவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ரபாடா 9, டுமினி 16, ஆம்லா 21, கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 22 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 94 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டெம்பா பெளமா-டி காக் ஜோடியின் அபார ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா சரிவிலிருந்து மீண்டது.

டி காக் 118 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 91, டெம்பா பெளமா 160 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 95 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் குவித்துள்ளது. வெர்னான் பிலாண்டர் 36, மோர்ன் மோர்கல் 31 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

நியூஸிலாந்து தரப்பில் டி கிராண்ட்ஹோம், நீல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?