
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸிடம் இருந்து வெற்றியைப் பறித்தார் ரஷியாவின் எலினா வெஸ்னினா.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் எலினா வெஸ்னினா 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை துவம்சம் செய்தார்.
வெற்றி குறித்துப் வெஸ்னினா பேசியது:
“முதல் செட்டில் நான் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது வீனஸ் சில ஷாட்களை கோட்டைவிட்டார். அவர் களைப்படைந்தது போன்று காணப்பட்டார். அவருடைய ஆட்டத்தில் வேகம் இல்லை. ஆனால் திடீரென அபாரமாக ஆடினார். அப்போது நான் பதற்றமடைந்தேன். எனினும் அதையெல்லாம் தாண்டி வெற்றி கண்டதை பெருமையாகக் கருதுகிறேன்' என்றார்.
வெஸ்னினா தனது அரையிறுதியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மெடினோவிச்சை எதிர்கொள்கிறார்.
கிறிஸ்டினா தனது காலிறுதியில் 3-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாவை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.