பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 10ஆவது நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, தடகளம், பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஒலிம்பிக் திருவிழாவானது தொடக்க விழாவுடன் தொடங்கியது. இதையடுத்து 27ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. இதில், மனு பாக்கர் மகளிருக்கான தனிநபர் ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதுவரையில் இந்தியா ஒரு தங்கப் பதக்கம் கூட கைப்பற்றவில்லை. மேலும், இந்த தொடரில் இந்தியா பங்கேற்ற நீச்சல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், ரோவிங், பேட்மிண்டன், ஜூடோ ஆகிய போட்டிகளில் தோல்வி அடைந்து பதக்கம் இல்லாமல் வெளியேறியது. எனினும், பேட்மிண்டன் மற்றும் துப்பாக்கி சுடுதலில் ஒரு சில வீரர், வீராங்கனைகள் மட்டும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இன்று இந்தியா துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, தடகளம், பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இன்று நடைபெறும் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. லக்ஷயா சென்ற இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 10ஆவது நாளான இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் அட்டவணை:
பிற்பகல்: 12.30 மணி - துப்பாக்கி சுடுதல்
கலப்பு இரட்டையர் அணி – மகேஷ்வரி சவுகான் மற்றும் அனந்த்ஜீத் சிங் நருகா.
பிற்பகல்:1.30 மணி - மகளிருக்கான டேபிள் டென்னிஸ்
16ஆவது சுற்று போட்டி – இந்தியா – ரோமானியா (மணிகா பத்ரா, ஸ்ரீஜ் அகூலா, அர்ச்சனா கமத்)
மாலை 3.25 மணி - தடகளம்:
மகளிருக்கான 400மீ (சுற்று 1): கிரன் பகல் (ஹீட் 5)
பிற்பகல்: 3.45 மணி - படகுப் போட்டி
மகளிருக்கான டிங்கி (தொடக்க சுற்று): ரேஸ் 9 மற்றும் 10 – நேத்ரா குமணன்
மாலை 6 மணி: பேட்மிண்டன்
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு (வெண்கலப் பதக்கம் பிளே ஆஃப்) – லக்ஷயா சென் – ஜீ ஜியா லீ (மலேசியா)
மாலை: 6.10 மணி - படகுப் போட்டி
ஆண்களுக்கான டிங்கி (தொடக்க சுற்று): ரேஸ் 9 மற்றும் 10 – விஷ்ணு சரவணன்
மாலை 6.10 மணி: துப்பாக்கி சுடுதல் – தங்கம் அல்லது வெண்கலப் பதக்கம் போட்டி
கலப்பு இரட்டையர் அணி (தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டும்) – மகேஷ்வரி சவுகான் மற்றும் அனந்த்ஜீத் சிங் நருகா
இரவு 6.30 மணி: மல்யுத்தம் – மகளிருக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ 16ஆவது சுற்று போட்டி
நிஷா தஹியா – சோவா ரிஷ்கோ ரெட்டியானா (உக்ரைன்)
இரவு 7.50 மணி: மகளிருக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டி – தகுதி பெற்றால் மட்டும்
இரவு 10.34 மணி: தடகளம்
ஆண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸ் (சுற்று 1): அவினாஷ் சேபிள் (ஹீட் 2)
நள்ளிரவு 1.10 மணி: மல்யுத்தம்
மகளிருக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டி (தகுதி பெற்றால் மட்டும்) – நிஷா தஹியா