10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு 8ஆவது தங்கம் பெற்றுக் கொடுத்த பாலக் குலியா!

By Rsiva kumar  |  First Published Sep 29, 2023, 10:51 AM IST

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.


சீனாவின் ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது.

Hangzhou: இந்தியாவிற்கு 7ஆவது தங்கம் – 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் குழு வெற்றி!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் 7ஆவது நாளான இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிப்பிரிவில் பாலக் குலியா தங்கம் கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக இந்தியா 8ஆவது தங்கம் கைப்பற்றியுள்ளது. மேலும், பாலக் குலியா, இஷா சிங் மற்றும் திவ்யா சுப்பராஜூ ஆகியோர் குழு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளது. அதோடு, தனிப்பிரிவில் இஷா சிங் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ravichandran Ashwin: இந்திய அணியிலிருந்து அக்‌ஷர் படேல் நீக்கம்: கடைசி நேரத்தில் அஸ்வினுக்கு அடித்த ஜாக்பாட்!

இதே போன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், குசலே ஸ்வப்னில் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் கொண்ட குழு 1769 புள்ளிகள் பெற்று தங்கம் கைப்பற்றியுள்ளது. தனிப்பிரிவு போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் குசலே ஸ்வப்னில் அகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இறுதிப் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஹீரோக்கள் ஒன்றிணைந்த தருணம்! காணொளி காட்சியில் நிகழ்ந்த அபூர்வமான சந்திப்பு!

இதற்கு முன்னதாக நடந்த  துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அர்ஜுன் சீமா, சரப்ஜோத் சிங் மற்றும் ஷிவா நர்வா ஆகியோர் தங்கம் வென்றனர். மேலும், இதில், தனிப்பிரிவில் நடந்த இறுதிப் போட்டிக்கு சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூன் சீமா ஆகியோர் முன்னேறினர். எனினும், சரப்ஜோத் சிங் 4ஆவது இடம் பிடித்தார். அர்ஜூன் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hangzhou 2023: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம்: அசத்திய அர்ஜுன் சீமா, சரப்ஜோத் சி, ஷிவா நர்வா டீம்!

மேலும், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரைபிள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இதே போன்று நடந்த 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தனிப்பட்ட பிரிவில் ஷிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் கைப்பற்றினார். ஆஷி சௌக்ஷி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மேலும், இதில் நடந்த டீம் போட்டியில் ஷிஃப்ட் கவுர் சாம்ரா, ஆஷி சௌக்‌ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர். இன்று நடந்த டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகித் மைக்கேனி ஜோடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.

Welcome to India: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாகிஸ்தான் – முதல் முறையாக பாபர் அசாம் இந்தியா வருகை!

இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இந்தியா 8 தங்கம், 11 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 30 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. சீனா, 93 தங்கம், 54 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் என்று 173 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

ஆறுதல் வெற்றியோடு CWCல் எண்ட்ரி கொடுக்கும் ஆஸ்திரேலியா – போராடி தோற்ற இந்தியா!

 

🚨 8th GOLD MEDAL FOR INDIA🥇

17 yrs old Palak & 18 yrs old Esha Singh won Gold & Silver in 10m Air Pistol. pic.twitter.com/4wUWEMfyjp

— Indian Tech & Infra (@IndianTechGuide)

 

: Saketh Myneni-Ramkumar Ramanathan wins silver🥈 in the final of Men’s Doubles Tennis pic.twitter.com/eoPQkvaJPf

— DD News (@DDNewslive)

 

 

: Shooting stars Aishwary Pratap Singh Tomar, and Akhil Sheoran, wins gold medal in 50m Rifle 3Ps pic.twitter.com/cDxRIQwQ6d

— DD News (@DDNewslive)

 

click me!