
சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வாகைச் சூடிய பாகிஸ்தான் அணி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதிப் பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வாகை சூடியதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏற்றம் கண்டுள்ளது.
எட்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான், இப்போது 95 ரேட்டிங் புள்ளிகள் எடுத்து இரு இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
2019-உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் எட்டு அணிகள் நேரடித் தகுதி பெறும்.
அதில் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே தகுதிப் பெற்றது. எஞ்சிய 7 அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெறும்.
அதாவது செப்டம்பர் 30-ஆம் தேதி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் 7 அணிகள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெறும்.
தென் ஆப்பிரிக்கா முதலிடமும், ஆஸ்திரேலியா இரண்டாமிடமும், இந்தியா மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.