
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருவதைப் பார்த்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்ஜாமம் உல் ஹக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, நிரந்தரச் சட்டம் கோரி தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக, அறவழியில் தொடர்ந்து 7-வது போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் இருக்கும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜாமம் உல் ஹக் இளைஞர்களின் எழுச்சிமிக்க, அறவழிப்போராட்டத்தை டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், “ தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக இளைஞர்கள் அமைதியாக நடத்தி வரும் போராட்டம் மிக அருமையானது. பாராட்டுக்கள். , மிகவும் அறிவார்ந்த முறையில் படித்த இளைஞர்கள் கூடி இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். உண்மையில் இந்த போராட்டத்தைப் பார்த்து பாகிஸ்தான் தலைவணங்குகிறது '' எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.