முதல் இன்னிங்ஸில் 289 ஓட்டங்கள் எடுத்தது வங்கதேசம்…

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
முதல் இன்னிங்ஸில் 289 ஓட்டங்கள் எடுத்தது வங்கதேசம்…

சுருக்கம்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 289 ஒட்டங்கள் எடுத்தது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த வங்கதேசத்தில் தொடக்க ஆட்டக்காரர் தமீன் இக்பால் 5 ஒட்டங்களில் வீழ்ந்தார்.

உடன் வந்த செளம்யா சர்கார் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். மறுமுனையில் மஹ்முதுல்லா 19 ஒட்டங்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசன் செளம்யா சர்காருடன் இணைந்து சற்று நிலைத்தார்.

அவர் 9 பவுண்டரிகளுடன் 59 ஒட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் 7, நஸ்முல் ஹொஸைன் 18, ஹசன் மிராஸ் 10, டஸ்கின் அகமது 8, கம்ருல் இஸ்லாம் 2 ஒட்டங்களில் வீழ்ந்தனர்.

நூருல் ஹசன் 47 ஒட்டங்கள் எடுக்க, செளம்யா சர்கார் 11 பவுண்டரிகளுடன் 86 ஒட்டங்கள் விளாசி வீழ்ந்தார்.

இறுதியாக 84.3 ஓவர்களில் 289 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம்.

நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டிரென்ட் போல்ட் 4, வாக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!
Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!