
கடந்த 2014ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் பெற்றார். இவருக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்பகவான் சிங் மகள் ஷீடல் சர்மாவிற்கு இன்று திருமணம் நடந்தது.
திருமணத்திற்காக மணப்பெண் வீட்டிலிருந்து வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக யோகேஷ்வர் பெற்றுள்ளார். தனது இரண்டு சகோதரிகள் திருமணத்திற்காக தனது பெற்றோர்கள் சிரமப்பட்டு வரதட்சணை கொடுத்தனர். ஆகையால் என் தந்தை பெற்ற மன உளைச்சல் தான் திருமணம் செய்யும் பெண்ணின் தந்தை பெறக்கூடாது என்பதால் இந்த முடிவை எனது இளமை பருவத்தில் மல்யுத்தத்தில் சாதிப்பது, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்வது என இரண்டு முடிவுகள் எடுத்து இருந்தேன் அதனை தற்போது நிறைவேற்றி விட்டதாக தெரிவித்தார்.
கடந்தாண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு யோகேஷ்வர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் ஏற்கனவே இரு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் பெற்றுள்ளார்.
வரதட்சனை கொடுமையால் எத்தனையோ குடும்பங்கள் தொடர்ந்தும் இன்றும் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமண வயதை தாண்டியும் பல கன்னிப் பெண்கள் இன்னும் சமுகத்தில் அவர்களின் வாழ்வு இருளடைந்த வருகிறது.மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் இந்த செயல் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று அவரை பாராட்டி வருகின்றனர். தங்களுக்கும் இந்த மாதரி கணவன் அமைந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லாமால் தாங்கள் வாழ்கை இனிதாக அமையும் என பெண்கள் கூறி வருகின்றனர்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.