ஒலிம்பிக்‍ வீரர்களுக்‍கு பயிற்சியளிக்‍க சிறப்புக்‍ குழு… மத்திய அரசு அதிரடி..

 
Published : Jan 31, 2017, 08:46 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஒலிம்பிக்‍ வீரர்களுக்‍கு பயிற்சியளிக்‍க சிறப்புக்‍ குழு… மத்திய அரசு அதிரடி..

சுருக்கம்

ஒலிம்பிக்‍ வீரர்களுக்‍கு பயிற்சியளிக்‍க சிறப்புக்‍ குழு… மத்திய அரசு அதிரடி..

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வதற்காக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சிறப்புக் குழு அமைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தயார்படுத்துவதற்கும், அவர்களுக்கு சிறந்தபயிற்சிகளை அளிப்பதற்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் எட்டு பேர் கொண்டசிறப்புக்குழுவை அமைத்துள்ளது.

இக்குழுவில், கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச்சூடு பிரிவில் தங்கம்வென்ற அபினவ் பிந்த்ரா, பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட 8பேர் இடம்பெற்றுள்ளனர். 2020, 2024 மற்றும் 2028-ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு இவர்கள் பயிற்சி அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கும் எனவும், வரும்ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்த இக்குழு உதவும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?