
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 முறை பதக்கங்களை வென்று கொடுத்தவர். ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் ராணாவை கொலைசெய்த வழக்கில் சிறையில் இருக்கிறார் சுஷில் குமார்.
சுஷில் குமார் மனைவிக்கு சொந்தமான அபார்ட்மெண்ட்டில் சாகர் ராணா வசித்துவந்த நிலையில், அவரை அந்த வீட்டிலிருந்து வெளியேறும்படி சுஷில் குமார் வலியுறுத்த, ஆனால் அதற்கு சாகர் ராணா மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையும் படிங்க - எக்குத்தப்பா விழுந்த வார்னருக்கு தலையில் அடி.. பதறிப்போன ஆஸ்திரேலிய அணி..! வைரல் வீடியோ
இதில் சாகர் ராணா மீது சுஷில் குமார் தரப்பு நடத்திய தாக்குதலில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் ராணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தப்பிச்சென்ற சுஷில் குமார் தொடர்ந்து தலைமறைவாகி வந்த நிலையில், அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க - பும்ராவுக்கு மாற்று வீரராக ஷமி - சிராஜ் இருவரில் யாரை எடுக்கலாம்..? கவாஸ்கர் கருத்து
சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரம், சட்டவிரோத வசூல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.