norway chess 2022: Praggnanandhaa: நார்வே செஸ்: பிரமாதம்! இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன்

Published : Jun 11, 2022, 12:16 PM IST
norway chess 2022: Praggnanandhaa: நார்வே செஸ்: பிரமாதம்! இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன்

சுருக்கம்

norway chess 2022: Praggnanandhaa:நார்வேயில் நடந்த நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு சாம்பியன் பட்டம் வென்றார்.

நார்வேயில் நடந்த நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு சாம்பியன் பட்டம் வென்றார்.

9 சுற்றுகள் ஆடிய பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று வெற்றியாளராக வலம்வந்தார். 9 சுற்றுக்களிலும் பிரக்ஞானந்தாவை எந்த வீரராலும் தோற்கடிக்க முடியாத வெற்றியாளராகவே இருந்தார். வெள்ளிக்கிழமை நடந்த கடைசிச் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் வி.பிரணீத்தை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 2-வது இடத்தை இஸ்ரேல் வீரர் ஐஎம் மார்செல் ப்ரோம்ஸ்கி, 3-வது இடத்தை ஸ்வீடன் வீரர் ஜங் மின் சியோ பெற்றனர். இந்திய வீரர் பிரணீத்6 புள்ளிகள் பெற்று 3-வது இடம் வந்தபோதிலும் டைபிரேக்கரில் ஸ்கோர் செய்யாததால் 6-வது இடம் சென்றார்.

இந்தப் போட்டியில் பிரணீத்தைத் தவிர்த்து, பிரக்ஞானந்தா, 8-வது சுற்றில் விக்டர் மிக்ஹால்வ்ஸ்கி, 6வது சுற்றில் விடாலி குகின், 4-வது சுற்றில் முகம்மதுஜோகித் சுயராவ், 2-வது சுற்றில் சிமென் முட்சோவ், முதல் சுற்றில் மத்தியாஸ் உன்னேலேண்ட் ஆகியோரை வீழ்த்தினார். 3 போட்டிகளை பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

சமீபகாலமாக பிரக்ஞானந்தா ஆட்டம் பிரமாதமாகஇருந்து வருகிறது. செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைனில் சமீபத்தில் உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இறுதிச்சுற்றில் சீனவீரர் டிங் லிரனிடம் வீழ்ந்தார்.
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியில் பிரக்ஞானந்தா விளையாட உள்ளார். 

பிரக்ஞானந்தா பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள். முதல்நிலை வீரரான பிரக்ஞானந்தா பட்டம் வெல்வதில் வியப்பேதுமில்லை. பொதுவாகவே பிரக்ஞானந்தா நன்றாக விளையாடுவார், 3போட்டிகளை டிரா செய்துள்ளார். அவரின் வெற்றி மேலும் ஊக்கத்தை அளி்க்கும்” எனத் தெரிவித்தார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?