மண்டல கிரிக்கெட்டில் தெற்கை தோற்கடித்தது வடக்கு…

 
Published : Feb 13, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
மண்டல கிரிக்கெட்டில் தெற்கை தோற்கடித்தது வடக்கு…

சுருக்கம்

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான மண்டலங்கள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் வடக்கு மண்டல அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தெற்கு மண்டல அணியைத் தோற்கடித்தது.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ஒட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆர்.கே.புய் 50, சங்கர் ஆட்டமிழக்காமல் 34 ஒட்டங்கள் எடுத்தனர்.

வடக்கு மண்டலம் தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா, டாகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய வடக்கு மண்டல அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக கெளதம் கம்பீர் 51 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 81, ஷிகர் தவன் 38 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தனர்.

தெற்கு மண்டலம் தரப்பில் அரவிந்த், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பவுலர்களை துவம்சம் செய்த RO-KO கூட்டணி.. விஜய் ஹசாரே டிராபியில் சதம் விளாசி ரோகித்-விராட் அசத்தல்!
33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!