Nikhat Zareen :உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்

By Pothy RajFirst Published May 20, 2022, 10:10 AM IST
Highlights

Nikhat Zareen :Womens World Boxing Championship 2022 :துருக்கியில் நடந்த மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பின்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கப் பதக்கத்தை வென்றார். 

துருக்கியில் நடந்த மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பின்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கப் பதக்கத்தை வென்றார். 

இஸ்தான்புல் நகரில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்பாங் ஜுதாமாஸை வீழ்த்தி ஜரீன் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம் மகளிர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா கேசி ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.

25வயதான ஜரீன் ஜூனியர் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜூதாமஸை  30-27, 29-28, 30-27, 29-28 ஆகிய புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜரீன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தெலங்கானாவைச் சேர்ந்த ஜரீன் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் முதல்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆனால், மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018) 6 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சரிதா தேவி 2006ம் ஆண்டிலும், ஜென்னி 2006ம் ஆண்டிலும், லேகா 2006ம் ஆண்டிலும் தங்கம் வென்றனர். 2018ம் ஆண்டுக்குப்பின் மகளிர்குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜெய் சிங் கூறுகையில் “ உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது எப்போதுமே ஜரீனுக்கு கனவாக இருந்தது. அந்தக் கனவு விரைவாக நிறைவேறியிருக்கிறது. அவரின் சாதனை அற்புதமானது. ஜரீனை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் மட்டுமல்ல குத்துச்சண்டைப் போட்டிக்கு வர நினைக்கும் இளைய தலைமுறைக்கு ஜரீனின் சாம்பியன் பட்டம் ஊக்கமாக, தூண்டுகோலாக அமையும்” எனத் தெரிவித்தார்

57கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மணிஷா, 63 கிலோ எடைப்பிரிவில் பிரவீன் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை வென்றனர். இந்தியாவின் சார்பில் ஒரு தங்கம், 2 வெண்கலத்துடன் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பயணம் முடிந்தது. 
மகளிர் குத்துச்சண்டை சாம்பின்ஷிப் தொடங்கப்பட்டு 20வது ஆண்டு நிறைவடைகிறது.

அதையொட்டி நடத்தப்பட்ட இந்த போட்டியில் 73 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் 12 வீராங்கனைகள் சென்றிருந்தனர்.  இதில் 8 பேர் காலிறுதிவரை சென்றனர். ஒட்டுமொத்த குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்தியா 39 பதக்கங்களை வென்றுள்ளது, அதில் 10 தங்கம், 8 வெள்ளி, 21 வெண்கலம் ஆகும்
 

click me!