ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது நியூஸிலாந்து...

Asianet News Tamil  
Published : Jan 23, 2018, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது நியூஸிலாந்து...

சுருக்கம்

New Zealand won by seven wickets

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் வெல்லிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்ட் செய்ய தீர்மானித்தது. பேட் செய்த பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. பாபர் ஆஸம் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுக்க, அடுத்த படியாக ஹசன் அலி 23 ஓட்டங்கள் சேர்த்தார்.

மீதமுள்ள வீரர்களில் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது உள்பட 6 பேர் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். உமர் அமின், ஷாதாப் கான் டக் அவுட் ஆகினர்.

நியூஸிலாந்து தரப்பில் சேத் ரேன்ஸ், டிம் செளதி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். சேன்ட்னர் 2 விக்கெட்கள் , அனாரு கிட்சன், காலின் மன்ரோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

பின்னர், பேட் செய்த நியூஸிலாந்தில் காலின் மன்ரோ - ராஸ் டெய்லர் வெற்றிக்கு வழிநடத்தினர். மன்ரோ 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 49 ஓட்டங்களும், ராஸ் டெய்லர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடக்க வீரர் கப்டில் 2 ஓட்டங்கள், அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 3 ஓட்டங்கள், டாம் புரூஸ் 26 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர்.

பாகிஸ்தான் தரப்பில் ருமன் ராயீஸ் 2 விக்கெட்கள், ஷாதாப் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

காலின் மன்ரோ ஆட்டநாயகன் ஆனார்.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றதையடுத்து மூன்று ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?