தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: மேற்கு வங்கத்தை வீழ்த்தி தமிழக மகளிரணி அசத்தல்...

 
Published : Jan 23, 2018, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: மேற்கு வங்கத்தை வீழ்த்தி தமிழக மகளிரணி அசத்தல்...

சுருக்கம்

National basketball championship West Bengal defeated by tamilnadu women team

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் மேற்கு வங்கத்தை வீழ்த்தி தமிழக அனி அசத்தியுள்ளது.

சென்னையில் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி-68 நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆம் நாளான நேற்று மகளிர் பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 84-50 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக தமிழக தரப்பில் ஸ்ரீவித்யா 17 புள்ளிகளும், மேற்கு வங்கத்தில் சுகுமோனி 10 புள்ளிகளும் வென்றனர்.

மற்ற ஆட்டங்களில் உத்தரப் பிரதேசம் 69-54 என்ற கணக்கில் தெலங்கானாவையும், நடப்புச் சாம்பியன் கேரளா 63-42 என்ற கணக்கில் டெல்லியையும் வீழ்த்தின.

மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 63-78 என்ற கணக்கில் கர்நாடகத்திடம் வீழ்ந்தது. சத்தீஸ்கர் 90-61 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது.

ஆடவர் பிரிவு ஆட்டங்களில் சண்டீகர் 83-70 என்ற கணக்கில் கேரளத்தையும், சர்வீசஸ் 87-59 என்ற கணக்கில் குஜராத்தையும், பஞ்சாப் 70-68 என்ற கணக்கில் உத்தரகண்டையும் வீழ்த்தின.

இந்திய இரயில்வே 103-79 என்ற கணக்கில் ராஜஸ்தானையும், சர்வீசஸ் அணி மற்றொரு ஆட்டத்திலும் 90-70 என்ற கணக்கில் கர்நாடகத்தை வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?