இந்திய அணியின் பவுலிங்கை பொளந்து கட்டும் நியூசிலாந்து!! தொடக்க ஜோடி அபாரம்.. சேஃபெர்ட் அதிரடி அரைசதம்

By karthikeyan VFirst Published Feb 6, 2019, 1:27 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் கோலின் முன்ரோ மற்றும் சேஃபெர்ட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.

குறிப்பாக இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பந்தை கட்டம் கட்டி அடித்தனர். கலீல் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் முன்ரோ. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் சேஃபெர்ட் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசினார். பின்னர் கலீல் வீசிய 4வது ஓவரில் முன்ரோ அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாச, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகியோர் பந்துவீச, யார் பந்துவீசினாலும் ஓவருக்கு பவுண்டரியோ சிக்ஸரோ தொடர்ந்து அடித்தனர். தொடக்க ஜோடியையே பிரிக்க முடியாமல் திணறிய நிலையில், முன்ரோவை 34 ரன்களில் வீழ்த்தினார் குருணல் பாண்டியா. 

அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சேஃபெர்ட் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பிறகு இந்திய அணியின் பவுலிங்கை மேலும் அடித்து ஆடுகிறார். சேஃபெர்ட்டுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். சேஃபெர்ட், எல்லா பந்துகளையும் அடித்து ஆடிய சேஃபெர்ட், 84 ரன்களில் கலீலின் பந்துல் போல்டானார். அந்த அணி 13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை குவித்துள்ளது. 

click me!