டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி செய்த செம சம்பவம்!!

By karthikeyan VFirst Published Feb 6, 2019, 12:57 PM IST
Highlights

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது. 
 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி, தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்கியுள்ளது. டி20 போட்டியில், ஒரு அணி மூன்று தொழில்முறை விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்குவது இதுவே முதன்முறையாகும். 

இவர்களில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பேட்ஸ்மேன்களாக அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மூவருமே விக்கெட் கீப்பர்கள் என்பதால், ஆடும் லெவனில் மூன்று விக்கெட் கீப்பர்களுடன் ஒரு அணி களமிறங்குவது இதுவே முதன்முறை. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடிவருகிறது. 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 54 ரன்களை குவித்துள்ளது. 
 

click me!