
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பூர்ணிமா ராவ் திடீரென நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பரோடாவைச் சேர்ந்த முன்னாள் வீரரான துஷார் அரோத் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நீக்கம் குறித்துப் பூர்ணிமா ராவ் பேசியது:
“கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது பயிற்சியின் கீழ் இந்திய அணி எட்டு தொடர்களை வென்றுள்ளது. ஆனால், இப்போது எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், என்னை நீக்கியிருக்கிறார்கள்.
உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் என்னை நீக்கியிருப்பதன் மூலம் அணியைப் பற்றியோ, அதன் வெற்றியைப் பற்றியோ, நாட்டை பற்றியோ பிசிசிஐ சிந்திக்கவில்லை.
2015 முதல் பயிற்சியாளராக இருந்து வந்த நான், அவர்கள் என்ன ஊதியம் கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனினும் எனது நீக்கத்தால் அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.