இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளர் - பிசிசிஐ முடிவு...

 
Published : Apr 27, 2018, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளர் - பிசிசிஐ முடிவு...

சுருக்கம்

New bowling Coach for Indian Women Cricket Team - BCCI ...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிப்பது என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு தலைமைப் பயிற்சியாளர் துஷார் அரோத் பேட்டிங் தொழில்நுட்பம் நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். 

பிஜு ஜார்ஜ் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 

இருப்பினும், இந்திய மகளிர் அணிக்கு பெளலிங் பயிற்சியாளர் தேவை என்று இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்தது. 

இதனையடுத்து இந்திய மகளிர் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது. 

ஆசியக் கோப்பைக்கான மகளிர் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி வரை முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில் இந்திய மகளிர் அணிக்கு புதிய பௌலிங் பயிற்சியாளரை  நியமிப்பது என்பது பின்னடைவாக அமையுமா? அல்லது கூடுதல் பலமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Shubman Gill: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் சுப்மன் கில்.. எந்த டீம் தெரியுமா?
சுப்மன் கில் ஆடியே ஆகணும்.. அடம்பிடித்த கம்பீர், அகர்கர்.. தேர்வுக்குழுவில் எதிர்த்த 'அந்த' 2 பேர் யார்?