தன்னை கிரிக்கெட்டின் டான் என தானே புகழ்ந்துகொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தருக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், அதிவேகமாக தாறுமாறாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை பதம் பார்த்திருக்கிறார். இவர் ஆடிய காலத்தில் அதிவேகமாக வீசியவர் அக்தர். 1997ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 178 விக்கெட்டுகளையும் 163 ஒருநாள் போட்டிகளில் ஆடி 247 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிவேகமாக பந்துவீசியதால் “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரது அதிவேக பவுன்சர்கள் பல பேட்ஸ்மேன்களை பதம்பார்த்துள்ளது. அண்மையில் யூசி பிரௌசர் நடத்திய உரையாடல் நிகழ்ச்சியில் அஃப்ரிடியுடன் கலந்துகொண்ட சேவாக், தனது கிரிக்கெட் வாழ்வில் தான் சில தருணங்களிலாவது பயந்த பவுலர் என்றால், அது அக்தர் தான் என சேவாக் தெரிவித்திருந்தார். அக்தர் வீசும் எந்த பந்து காலுக்கு வரும், எந்த பந்து தலைக்கு வரும் என்று தெரியாது என்று சேவாக் கூறியிருந்தார். இந்நிலையில், ஷோயப் அக்தர் தன்னை பற்றி பெருமையாக தானே பதிவிட்டிருக்கும் ஒரு டுவீட்டை கண்டு கொதித்த நெட்டிசன்கள், அவருக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர். அக்தர் தனது டுவிட்டரில், என்னை கிரிக்கெட்டின் டான் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் நான் யாரையும் காயப்படுத்த விரும்பியதில்லை. களத்தில் என் நாட்டுக்காகவும் என் ரசிகர்களுக்காகவும் வேகமாக ஓடிவந்து பந்துவீசுவதை நேசிக்கிறேன் என்று அக்தர் பதிவிட்டிருந்தார். Don of cricket as they called me but never enjoyed hurting people but I must say when I was out there I just ran in for the love of my country & for the people around the world .. pic.twitter.com/be84Y2yYl5 — Shoaib Akhtar (@shoaib100mph) October 7, 2018 இதைக்கண்ட ரசிகர்கள், 2003 உலக கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அக்தரின் பந்துகளை சச்சின் டெண்டுல்கர் பறக்கவிட்ட வீடியோவை பதிவிட்டு, கிண்டல் செய்து பதிலடி கொடுத்துவருகின்றனர். How can you forget this gem from @sachin_rt !! Smashing you my friend. You were also winning asia cup this time..😂 pic.twitter.com/jyFgga9EXc — Gautam (@TheMystic19) October 7, 2018 Baap... Baap Hota Hai Beta... Beta Hota hai@sachin_rt @virendersehwag @shoaib100mph pic.twitter.com/uoNuoHrBOV — ANKIT (@SRKpePHD) October 8, 2018 அந்த குறிப்பிட்ட போட்டியில் சச்சின் டெண்டுல்கர், 75 பந்துகளில் 98 ரன்களை குவித்திருந்தார். சச்சினை சதமடிக்க விடாமல் பவுன்சர் வீசி சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியதும் அக்தர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.